முதல் படைப்புக்கு

முகவரி தேடியே...
முன்நெற்றி பத்திக்கிச்சு...
முகவரி மட்டும்தானிருக்கு
முழுமதி காணலியே.....
முகவரிக்கு செல்லும் வாக்கு
நாக்கு தப்பி ஓடிப்புட்டா...

முகவரிகள் ஒவ்வொண்ணும்
முகம்மூடி தானிருக்கு..
முகமூடி அணிஞ்சிருக்கு..
முட்டா கொம்போடே காத்திருக்கு...

முடிவுகள் ஒவ்வொண்ணும்
தலை தின்ன தவமிருக்கு..
தமிழன் என்று  நான் சொன்னால்
யார் தமிழன் என்றே
திரும்பிவரும்...
திருந்தா மறுமொழியிடும்...
தமிழை மண்டியிடும்..
தற்குறிப்பேற்றும்
தலைமுடி பறிபோகும்.....

நாமே தமிழர் என்றால்
தமிழுக்குள்ளே பகுப்பு வரும்..
பரம்பரை பகை வரும்...
பன்னி தின்னும் கதை வரும்..
பத்தினி சாபமிடும்
பாழ்தமிழ் மறவரே...
கருவை பருகி ...
இருப்பை உருவி
உணர்வை குழியிடும்
உயிர் குன்றிடும்.....

சந்தங்களில் சாதியில்லை - என
சான்றுகள் பல கொண்டால்...
சாக்கடைக்குள் வாழ்ந்துகொண்டே
சாப்பிட்டே உயிர் கொண்டால்..
ஊனின் வாசத்தில்
உப்பள நாற்றம் அறியுமோ
உயிர் உண்ட உன்கதை அவிழுமோ.....

மார்பை சுத்தம் செய்ய
ஆசை கொண்ட
அஃறிணை நான்தானே...
அஞ்சாதே கருவிழிக்க
ஆறறிவு வேண்டி நின்றேனே..

ஆதாயம் தேட வில்லை - அது
தலைக்கு பெருமை இல்லை..
அழுக்குடையை வெளுக்கணுமே - அது
தோலோடே  வளர்ந்திருக்கே -அந்த
தோலுரிச்சு பழம் தின்ன
எனக்கு ஆறறிவு போதலியே...அதாவது
இருக்குதான்னும் தெரியலியே...

ஆமை குஞ்சு போலத்தானே  - நானும் ஓட்டுக்குள்ளே மாட்டிக்கிட்டேன்...
பசியோ மல்லாக்கப் புரட்டிப்போட
நானும் வயித்துக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டேன்....

கண்ணு முழிச்சு பார்க்கிறப்போ காலநேரம் ஓடிருச்சு.. .
இப்போ காலனை விரட்ட தானே
ஏணி பிடிச்சு  ஏறி வாரேன்...

ஏக்கம் எல்லாம் சேர்த்து வச்சு வார்த்தையில  திரிபோட்டு
தமிழெண்ணெய் ஊற்றி...
நானே பத்த வைச்சேன்...
பத்திக்கிட்டேன்
பற்றி எரியிறேன்.....

இது நின்னு எரிஞ்சிடுமோ - இல்ல
நிற்கதியா  நின்னுடுமோ...
பற்ற வைத்த நெருப்பு எல்லாம்
பகையா  மனசில் படர்ந்திடுமோ.. இல்ல
பக்திகொண்ட  மனம் போல
பசிகொண்ட காத்துலயே
கறைஞ்சிடுமோ....
ஆனாலும் கருப்பு வெள்ள
ஆட்சிபத்தி கவலையில்ல...

தூக்கிப்பிடி...
ஒத்தகொடி...
வேறருக்க இது தருணமடி..
உன் தமிழ் தானே
உனக்கு உயிருமடி...
இல்லையேல் நீ மடி....

முன்நாறு தலைமுறைக்கு மூத்தகுடி
முகம் மறைக்க பார்க்கும் காவியடி..
தமிழை தற்காக்க ஏந்திப்பிடி..
உன் தமிழே காக்கும்
உன் தாய்மடி.......