கவிதை பிறப்பின்
கடினம் தெரியுமா - அதைகவிதையில் சொன்னாலும்
உனக்கு அது புரியுமா...
கருத்துகள் கவிஞனின்
கண்ணைப்பறிக்கும்
காமனும் கவிஞனின்
மண்டையில் முளைக்கும்...
புருவ மத்திக்குள்
பொருளும் புகையும்
இதயங்களை பிழிந்து எடுக்கும்..
மனம் இலக்கணம் அறியணும்
படிப்பவர் மதி நிறைக்கணும் மனக்கணும்
மாற்றான் தோட்டத்து
மல்லிகை பூவாய்
மலரவே மறுக்கணும்...
ஒவ்வொரு கவியும்
புது மலராய் பிறக்கணும்
ஒவ்வொரு எழுத்தும்
புதுசாய் தெரியணும்
முந்திய பிறப்புக்கு
முந்தியே இருக்கணும்
ஒவ்வொரு நடையும்
முழுமை அடையணும்...
முடி முதல் அடி வரை
மொத்தமும் சுவைக்கணும்..
படிக்கிற மனசு
பற்றி எரியணும்...இல்லை
பகை மறக்கணும் - அல்லது
அடி மனசுல ஆசையோடு
ஆர்ப்பறித்து சிறக்கணும்...
இத்தனை போராட்டமும்
விதியென மனசில்
இடியென இறக்கியே
எழுதுவான் கவிஞன்...
கருத்துப்பிழையோ
வாக்கியப்பிழையோ - இல்லை அவர்கள் வாழ்க்கையே பிழையோ..
காரணம் தேடியே நீ
கருத்துவம் கண்டால்
கண்டும் காணாமல் கடந்து சென்றால்..
கயவன் யாருன்னு
தமிழ்தான் அறியும் ...
தமிழா உனக்கு இதுவும் தெரியும்...
கவிதை பிறப்பது
தமிழ் தாய்மடி - நீ அதில்
சதி செய்வது என் தலைவிதி...

0 Comments