நீ அருகில் இருக்கையில்
அணைக்கணும் விழிக்குள்ளேவிழி திரண்ட நீரில்
ஆனந்தமீனாய்
குளிக்கணும் அதற்குள்ளே...
இது
கனவோடு தானா..
கை தீண்டும் வரைதானா..
நீயும் தேனாம்
மலர் தேடும் வண்டுக்கு..
மையல்போதைக்கு
உடலாம்
உடலோடு மட்டுமே ஊடலாம்
என் காதலாம்..
காரித்துப்பும்
எச்சிலுக்கும் தெரியும்...
நீ
மண்ணோடும் சுவையாவது..
ஏனாம்
எனக்காம்
என் உறுப்புக்காம்
துடிக்கும்
இறவா அறைகளுக்குள்
நீ
இல்லையாம்...
ஏனாம்
அதற்கு
நீ
இம்சையாம்...
கொல்லும் மொழிகள்
கோவை விழிகள்
ஆரத்தழுவியே
அந்நாந்து பார்க்கும் நொடிகள்
இனிக்குமடி
இளமைக்கு பசிக்குமடி....
நீ
என் மற்றொரு தாயடி....
பலநாள் உணராமலே
உளன்றேனடி...
தடுமாறும்
பொழுதுகளில்
தலைக்கூந்தலில் நெருப்பாய்
என் விரல்கள்..
உன்னைச்சுடும்
உலுக்கும்....
உலகை கருக்கும்...
கருவோடு களவு சொல்லும்
நாக்கு
சுடும்..
மறுகணமே
திருப்பிச்சுடும்...திருப்தியாய் சுடும்..
படுக்கும்...பற்றும்..
பாவமடி
நான்..
உன்னைப் படுத்தியே
உடுக்கும்
தண்டனைகளை
நரகத்தில் நான் நடுகையில்
நன்றாய் பெறுகையில்...
நானும் பாவமடி..
என்னை காணும் கண்களுக்கு...
பசிக்கு
பழமரமாய்..
பலமனமாய்.தேடும் நான்...
எனக்கு
பலமாய்
நீ
இல்லாதிருந்தால்..
நான்
இன்று
இல்லாதே போயிருப்பேன்..
என் இம்சையே
இச்சையே
இரங்கலே
இருதயமே
என் இல்லாளே...இருதயமாய் உள்ளாலே...
இப்பிறவி கொள்ளுமட்டும்..
இவ்வுடல் தின்னு மட்டும்...
நாட்கள்
இனி
உன்னோடே...பின்னோடும்...

0 Comments