ஏதோ ஒரு காரணம் வேணும்
உன்னை இப்போ
நானும் பார்க்க....

சந்திரனை பார்க்க
வந்ததாக சொல்லலாமா ....
இல்லை...

சாயந்திர வேளையை
காணவில்லை என்று சொல்லலாமா...

தென்றல் காட்டும்
தீண்டவில்லை எனலாமா...
தெருவோர விளக்கு
எரியவில்லை எனலாமா ...

ஏற்றிய தீபத்திற்கு
எண்ணெய் இல்லை எனலாமா...
ஏக்கம் தீர்க்கவே
உன்னை காண வந்தேன் எனலாமா..

இதை காதல் என்று சொல்லலாமா உன் பார்வையால் நான்
காயம் பட்டதை சொல்லலாமா...

இருதயம் துடிக்கவில்லை எனலாமா
இமைகள் இருப்பது
பிடிக்கவில்லை எனலாமா ..

இன்னும் என்னென்ன
காரணம் சொல்வேன்...

உன்னை நான் காண
ஓடோடி வருகையில்
தூரமாய் இருந்தே...
அனலாய் எரிக்கும்
உன் மூச்சுக்காற்றிடம்...
காதலே
என் காதலியே ...

கடைக்கண் பார்வை
ஒன்று தீண்டிப் போ...
என் தீராத இரவு
இன்னும் நீளும்
வார்த்தை ஒன்று சொல்லிப்போ..

இமை வழியே நீவிப் போ
இரவில் என் கனவுகள்
இமைக்க மறந்தே சாகும் போ...

காதலை சொல்லடி கள்ளியே கண்களால்
களவு கொண்டாய்...
என் கண்களை காணவில்லையே.. இருதயம் முழுவதும் துடிக்கவில்லையே..

ஏன் உன் முகம் மட்டும்
மறக்கவில்லையே..
இமைகள் மூடவில்லையே
அதன் நடுவே
உன் விரல் மட்டும் கூடவில்லையே..

கூடுமானால்
குளிர்வித்து போ
முத்தமிட்டே
அந்த காற்றை ..
உன் பார்வைக்காய்
ஓடிவந்த நானும்
அந்தக் காற்று தீண்டியே
என்னுள் கருவாக்கி போகிறேன்..

காதலியே நானும்
கருப்பைக்குள்
உன்னையே
கருவாக்கி போகிறேன்....

சுகப்பிரசவமும்
வேண்டுமோ...இல்லை
என் காதல்
பத்துமாதம் தாண்டுமோ...

பத்து நிமிடமே ஆனாலும்
நீயே தானடி...
எந்தன் காதலி...

நீ என்னை
காதலிக்க தேவையில்லை..
காதலித்தாலும் பரவாயில்லை..
ஏனென்றால்
நான் உன்னை காதலிக்கிறேன்
அதுவே போதுமே...


நான் வியாபாரி அல்லவே
என் இருதயம் கொடுத்து
மாற்றாக
உன்னைப்பெற.......

நான் காதலன் மட்டுமே...
காதலை மட்டுமே தருவேன்....
நீ தாங்கினாலும்
இல்லை..
கல்லறை தாண்டியே
தூங்கினாலும்...
நான் தூங்கும் வரைக்கும்
நீயே நானடி...
என்னுள் நீயடி...