பருவங்கள்
பல கடக்கும்
பாட்டு ஒன்னு தான் கேட்கும்...
அவள் குரலில்.. அவளே முதல் காதலி..

பாறைக்குள்
செடி முளைத்த காதலையும்
சொல்ல சொல்லும்...


கண்ணாமூச்சி
விளையாட
கண்ணைகட்டி விட்டவளை
காதலி என்றும் சொல்லும்...

அன்று
தான் பசியில் நின்றிருக்க
பரிசளித்த அவள்
பிரியாணி பார்வையும்
காதலியாகவே தெரியும்..

கற்றதும் பெற்றதும்
கொண்டு கடைசியில்
கல்யாணத்தில்
கரம் பிடிக்கும்..
அவளே தன் காதலி என்பதை
ஏற்றுக்கொள்ள
மனம் மறுக்கும்...

என்ன காதல் இது...

ஒவ்வொரு பூக்களாய்
தேனை சேகரித்து
தன்
தேன் கூட்டில் சேர்த்து வைத்து...

தேவைகள் தீர (தீர்க்கும்)
ஒருவரை
இறுதியில்
தேர்தெடுத்து..
கல்லறை நோக்கி பயணிக்கும்...