என்

காதலை உன்னிடம்
எப்படி சொல்வேன்.. கண்ணா..

உன் மனதில்
என் கண்கொண்டு
கல் எறியவா...

இல்லை
நீ
பிடித்த
சிகரெட்டை வாங்கி தரவா...
இல்லை அந்த புகையை
சேர்த்து வைக்கவா...

காதல்
கடிதம் எழுதி உன்
காலடியில் போடவா...

இல்லை..
நேரடியாக உன்னை
கட்டியணைக்கவா...

சேதி சொல்ல
தோழியை
தூது அனுப்பவா..
இல்லை
சேதாரமில்லா
என் மனதை திறந்து காட்டவா..
வா..அருகில்.. வா..

எப்படியாவது நான்
சொல்ல வேண்டும்..
இல்லையேல்

என் விழியில்
நீ படா வண்ணம்
என்னுள்
புதைந்து போக வேண்டும்...
செய் காதலா...