ஆத்திகனே வாடா

ஒருநொடி ஆத்திரமும் தாடா..

தடாககரையில்
தவழும் ஒரு குழந்தை
தவிப்புக்கு என்ன செய்யும்
தாவித்தானே மீன் பிடிக்கும்..

காற்று நிறைந்த பூவுலகில்
வாசனை எப்படி வட்டமிடும்
கடத்துவது யாரோ
அதை கட்டிவைத்தவன் யாரோ..

ஒருகாயம் கையிலே
கதறுது கைப்பிள்ளை
அம்மா..அம்மா என
அம்மாவை ஆக்கியவன் யாரோ
அவளுக்கு அம்மாவென
ஆக்கியவன் யாரோ...


அடுத்த நொடி சண்டைக்கு
இன்றைக்கு நிலம் உழுது
நாளைக்கு பசிபோக்கும்
பரமனும் கடவுளோ


அதை நாத்திகம் ஏற்குமோ..

ஆத்திகனே வாடா
நமக்கு சோறு போடும்
நம்ம ஊரு விவசாயகெழவனும்
கடவுள் தான் என
பூசை செய்வோம்  வாடா...