இருகனி காணா கவிதைகள்..

இதழ் சுடா சுவைகள்..

இமை மூடா கனவுகள்..

இடைநில்லா உடுப்புகள்..

இடைவெளியில்லா இதயதுடிப்புகள்..

இருதயம் வெடிக்கும் தருணங்கள்..

இமைப் பசியாரல்கள்..

இருக்கையில் இறக்கும் நொடிகள்..

இருந்தும் கரையாத நினைவுகள்..

இருநினைவிலும் ஒரே பதிவுகள்..

இரு உடல் ஒரு உயிராய்
வாழப்பிடிக்குமா...

காதலித்துப் பாருங்கள்...