ஒருமுறை நான்
உணவோடு கலந்தேன்..

உயிர் தொட்டு
உணர்விட்டு
ஊற்றாக உயிர்த்தேன்..

கருவினில் தான்
காற்றாக மிதந்தேன்

கனவோடு
நனவோடு
கைநீட்டி அழைத்தேன்..

உலாவும் காற்றிலே
உப்பாக இனித்தேன்..
தமிழாக
தரமாக
உயிர் தேடும் சுவையாக..

ஏனோ
இன்று பிணங்கள்
பணங்கள் தேடுதாம்...

பசிக்கவே மறந்து
பொழுதோடு சாகுதாம்..

தரையோடு தரையாக
ஊன் கரையும் உயிரோடு

உயிர்த்த கூட்டமாங்கே
கூதலில் சாகுதாம்
இவை இங்கோ
கூடிச்சாகுதாம்..