எண்ண மறந்தேன் நான்
என்னை மறந்தேன் நான்..

முகவரி நீ காட்ட
முழுநிலா நான் காண
முற்பிறவி நற்பலனாய்
முகம் கண்டேன் ..

நிலம்தானே நடைபயில
நிழலோடு நீ உரச
நித்தமும் ஏங்கிடுதாம்
இரவுதூக்கம் மறந்திடுதாம்..


வண்ணமாய் வெண்ணிலா
வாடையில் வாடிடுதாம்
வாத்தியசுரம் போலே உன்
வார்த்தைகளில் வாழ்ந்திடுதாம்..