உன்னைக் கண்டதும்
கவி படைக்கும்
கை விரல்கள் ஏனோ..
காரிருள் மத்தியில் நீந்திடும்
கயலைக் கண்டதால் தானோ..
உதட்டோரம் உச்சரிக்கும்
உருவகங்கள் ஏனோ..
உண்ணும் உணவாக
உன்னை தேடும் உயிர்துளி தானோ...
பார்வைக்குள் பலகுரல்கள்
செய்தாய் ஏனோ..
கொஞ்சிடும் கிளிப்பேச்சும்
மிஞ்சிடும் நிறை தானோ..
ஏனோ தானோ அன்றி
மனம் கெஞ்சிடும் வீனோ..
இன்னொரு பிறப்பிலும்
என்னுயிர் நீ தானோ..
என அறியேனடி..
நான்..

0 Comments