நின்னை சுட்டிடும்
வார்த்தைகள் மணக்கும்
நீ சூட்டிய
அர்ச்சனை தித்திக்கும்..

திகட்டாத தெள்ளமுதாம்
திருக்குறள் பேச்சழகாம்..

நின்னை நான் கைபிடிக்க
எத்தவம் செய்தேனோ..

நித்தம் காணும் கார்முகிலோ
நின்தோற்றம் சொல்லுமடி..
நின்மனசோடு போட்டியிட
வெண்சங்கும் கருக்குமடி..


நீ தொட்ட
காகிதப்பூ கரும்பாகும்
கட்டி நீ உடுத்திய
கரு மஞ்சள் காஞ்சனமாகும்..

வெட்டவெளி வேடிக்கையாகும்
உன் பாதம் பட்டால் தான்
புல்வெளி பூக்கும்..