அன்னப்பட்சிகள்
ஆளுமைகொண்டால்
ஆணாதிக்கம்
என்னாகும்..
ஆசைக்கு அவள்
அடிபணிய மாட்டாளே..
குட்டகுட்ட
குனியவும் மாட்டாளே..
வாசல் படி
தாண்டிவிட்டால்
பத்தினி தன்மை போய்விடுமே..
யோசிக்கும்
ஆண்களே..இதே
கேள்வியே உங்களுக்கும்..
நாங்கள்
அடிமை இல்லை..
அடி மனதில்
ஆயிரம் ஆசைகளை தாங்கியே
கனவுகளோடு உன் கரம்பிடித்தே
காதல் கொண்டோம்..
நீயோ
என் மாராப்பில் மறைத்த
என் மனதை என்று
காண்பாயோ...
ஆண் திமிரே..
உனக்கு திமிரே என் பிறப்படா..
புரிந்து கொள்..

0 Comments