இமை திறந்தே
நான் தொலைந்தேன்..
இறவாத உறக்கங்கள்
நான் உடுத்தேன்..

உடுப்புக்குள்
தேடல் கொண்டேன்..
காற்றை நிரப்பியே
களவு கொண்டேன்...

மாற்றங்கள் ஏனோ
மனதைத்தான் தின்றதே..
மயிரிழையில் உயிரோ
மரிக்கவே செய்யுதே..

கண்ணில்லா சாலைகள்
புண்ணில்லா காயங்கள்
நடைபாதை விபத்துகள்
இதழ் வலித்த உரிமங்கள்
தடைசெய்த குடியிருப்புகள்...

தரிசான பார்வைகள்
தனிவரிசை பயணங்கள்
பசித்த கருமணிகள்
ருசிக்காத கோலங்கள்...

இன்னும் சொல்லணும்
காதுகள் கூசணும்..
அருகிலே நீ வரணும்..
என் அறியாமை போக்கிடணும்...

ஆறறிவு கொண்டவனே..
என்னுள் ஓருயிரானவனே..
அடிமைக்குள் காதல்
அன்னமறியா ஊடல்
ஆறுமாத தவம்...
அன்பே ..வா..
காதலிப்போம்...
என் ஆசை கல்லூரியே....

ஊரியே மனதிற்குள்
உரமிட்டவனே...
உரிச்சொல் தாராயோ..
உடையாளின் உருவாக்கம் காணாயோ ...

(தொடரும்)