எழுதி முடித்த கவிதை நீ
எழுத்துப்பிழை தேடும் கவிஞன் நான்

உன் நெற்றி முதல் வரியாம் மூச்சுக்குழல்கள் எதுகை மோனையாம்
இமைகள் இரண்டும் இரட்டைக்கிளவியாம்

தேன் துளிகள் இரண்டும் தேமாவாம்
கன்னங்கள் இரண்டும் புளிமாவாம்

கையோடு சேரும் கருவிளமாம்
வார்த்தைகள் கூவிடும் கூவிளமாம்

கருணையற்ற இடமோ இடையினமாம்
துள்ளி நடக்கும் உன் பாதம் மெல்லினமாம்
வரிகளில் காணுது வல்லினமாம்
இறுதியில் நீ  இலக்கணமாம்

பிரம்மன் எப்படி எழுதினான் புரியவில்லை
எனக்கோ எழுத்துப்பிழை மட்டுமே தெரியவில்லை..