அவ்வளவு அழகு
கண் கூசாமல்
இரவினில் பார்க்கலாம்....
அவளை நினைத்து
கவிதைகள்
எழுதலாம்....
அவளின்
அழகை ஆராய
செயற்கை கோள்களை
அனுப்பலாம்....
அவளைத்
தொட
பல கோடிகளையும்
செலவு செய்யலாம்....
அந்த
மூன்றாம்
நாளில்
அவளை கொள்ளலாம்....
அவள்
முகம் பாராமல்
உண்ணவும்
மறுக்கலாம்....
மறக்கலாம்....
அவளுக்காக
படுக்கையை
மாடிக்கும்
மாற்றலாம்....
மாதத்தில்
ஒருநாள்
அவளைக்
காணாமல்
கண்ணீரும்
வடிக்கலாம்....
அவள்
போல
இவ்வுலகில்
யாருமில்லை
என்னவள்-
வான்மதி....

0 Comments