இருள் மறைத்தவை
இமைகளுக்கு சொந்தமில்லை..
இமை மறைத்தவை
இதழ்களுக்கு சொந்தமில்லை..
இதழ் மறைத்தவை
இருதயத்திற்கு சொந்தமில்லை.
இருதயம் மறைத்தவை
இருவருக்குமே சொந்தமில்லை..
இருவரும்மறைத்தவை
இல்லறத்திற்கு சொந்தமில்லை...
இல்லறத்தில் மறைத்தவை
இருள் சூழ்ந்து பாழாகும்...