காலைமுதல் நேரமில்லே
கவனத்தில் நீ கூடவில்லே..
காலார நான் நடக்கையிலே
கால் தடுக்கி விழுகையிலே
கையிலே ஏந்தினாயே
என்னம்மா உன்னைப்பாட..
எழுந்தால் மலையானாய்
விழுந்தால் உரமானாய்
உமிழ்த்தால் உணர்வானாய்
உயிர்களுக்கு உணவானாய்..
கண்களுக்கு கனவானாய்
காட்சிகளில் கவியானாய்
கவிதைகளில் உயிரானாய்
உயிர் வளர்க்கும் பயிரானாய்..
உன்னைப்போல யாருமில்லை
என்னை தாங்கும் தாயும் நீயே..
என்னைப்போல உன்னைக்காக்க
என்னைவிட்டா யாரிருக்கா...
விளைஞ்சதெல்லாம் எனக்குன்ன
வினையில்லாம பசி தின்னேன்
வீதிக்கு வீதியிங்கே
கூவி விற்க ஆள்வரவே...
அளவிலா ஆசையிலே
நானும் அடிஉரம் போட்டு
அடி மடியை பிடிச்சிழுத்தேன்...
ஆனாலும் போதவில்லை
எனக்கும் பசி ஆறவில்லை...
என்னாச்சோனு நான் பயந்து
ஏர் கலப்பைய தூக்கிப்பாக்க
ஏனோ என் வியர்வைக்கு
எவனோ விலை சொன்னான்..
யம்மாடி தாங்காதம்மா..
இம்மோடி ஆட்சியெல்லாம்..
அருப்பை கெடப்புல போட்டே
கெளம்பிட்டேன் கேள்வி கேட்க..
கேட்டது கிடைக்கலன்னா
நான் விளைச்சதை விக்கிறதில்ல
விடிவுக்கு மட்டுமே
வியர்வை சிந்தி உழைச்சிருவேன்..
என் வயிறு நிறைஞ்சுப்புட்டு
நீட்டி நானும் படுத்துருவேன்..
அப்போ கைநீட்டும்
இந்த அரசு பசியோட
கடனா சோறு கேட்டு
அயல்நாட்ட....
அந்த நிலை வேணாமம்னா
அந்த அரசுக்கு புத்தி சொல்லேன்...