கடவுள் இருக்கிறான்
காய்ந்த வயிற்றுக்கு
கவளம் போடும் கைகளுக்குள்..
கவலை கொள்கிறான்
காயப்படுத்தும் மனங்களுக்குள்..
வாசம் செய்கிறான்
வாசனை வீசும் சொற்களுக்குள்..
பாசமாய் வாழ்கிறான்
பால் ஊட்டும் அன்னைக்குள்..
நலமாய் இருக்கிறான்
நல்நெஞ்சாங்கூட்டு நம்பிக்கைக்குள்..
விந்தைகள் செய்கிறான்
விவசாயி விரல்களுக்குள்...
விடியலைக் காண்கிறான்
வியர்வைத் துளிகளுக்குள்..
மரணம் வரை மறைகிறான்
நானே கடவுள் என்ற மமதைக்குள்..
அறிவைக்கொண்டு
அன்பைச் செய்கிறான்
அவனே கடவுள்..
அவனே கடவுளாய் இருக்கிறான்...
அவனே கடவுளாய் இறக்கிறான்..
அவனே இறந்தும் வாழ்கிறான்...

0 Comments