எனக்கு
உன்னை மொத்தமா பிடிக்கலை..
எழத்தை படிக்கையிலே
பதறுது மனசு...
நிம்மதி இல்லை
சந்தோசமில்லை....

என் எழுத்தை படிக்கையிலே
மனசுகுளிரவில்லை...
மதி மயங்கவில்லை....மாறாக
பற்றி எரியுதே...
பதறவே வைக்குதே...

உன்ன புரிஞ்சுக்க
என் வயசு பத்தாதம்மா...
என் ஆக்கம் பொருந்தாதம்மா...
ஏதோ நானும்
இளங்கோவின் பேரனல்ல...
பாரதியின் பையனல்ல....

இராஜேஷ்குமாரையும் சுஜாதாவையும்
அறைகுறையாக படித்து வளர்ந்தவன்...
கதையின்னா என்னவென்று
அறியா வயதிலே....
கோட்டயம் புஷ்பநாத்தை படித்தவன்...
பாடபுத்தகத்தோடு
கதையையும் படிக்கவே பயந்தவன்
படித்தே வளர்ந்தவன்...

நான் எழுதுவதோ ஏதோ
மண்டைக்குள் தோன்றுவதை...
இல்லை..இல்லை...
யாரோ மண்டைக்குள் சொல்வதை
கைகளால் எழுதுகிறேன்
கரையானுக்கு மண்வீடுபோல....

எழுத்துகளின் அர்த்தமே
வாசகனின் கருத்துக்களில் தான்
அறிகிறேன்....

என்னை நோகடிக்காதே
ஏனெனில் எனக்கு
எழுத தெரியாதே..
எழ முயற்சித்தே எழுதறேன்...
உன் பெயரை கண்கள் காணவே
மனசு கருகறேன்....
பலபெயரை மாற்றி மாற்றி
நானும் எழுதறேன்...
மனசுக்குள்ள உன்னை ஏமாத்தறேனோனு
மதிகெட்டே அழறேன்...

வாயில்வைத்த
சர்க்கரை போல...
தானாகவே கரையறேன்...
என் எழுத்தாலயே தினம் அழறேன்...

என் மூளை சொல்வதை
கை எழுத மறுக்குது...
மனசு கேட்பதை
மூளை சொல்லவே மறுக்குது...

என் நிலைமை யாருக்கும்
வேண்டாமம்மா....
எழுதுவதே வரமென்றேன்
இன்றோ
எழுதா நொடிகளே
வரப்பிரசாதமாய் தோன்றுதே...

எனக்கு பிடிக்காததை
எழுத
கைகள் மறுக்குதே...
கண்கள் குளமாகுதே..
என்ன சொல்ல...
குருவி தலையில் பனங்காய் போல..
உன்னிடம் நானும்
உயர பறக்க முடியாமலே
தடுமாறறேன்...
தவிக்கறேன்...