கோடிக்கனவுகளில்
கொட்டிய வார்த்தைகளை
கூட்டிப்பெருக்கியே
உன் விழி தள்ளிடும்..
இது கடனோ கடமையோ
என் காதலில் கயமையோ...
காத்திருப்பதே என் தவமோ..
உன் கடைவிழி தீண்டாமலே
கருகிடுமோ..
எட்டி நடக்கையிலே
ஏட்டோடு என் தலையும்..
அசைந்து இசைந்ததுவே
உன் அடிதொடை இயைபோடு கூடியே..
அடுத்த வரிகள் சொல்ல
ஆயுளும் நீளுமோ
ஆசையும் கூடும்..
சொல்லடி..தமிழச்சியே..

0 Comments