ஒருநொடி மரணம்
நான்..
ஒருநொடி காரணம்
நீ..


ஒருநொடி செலவு
நான்..
ஒருநொடி களவு
நீ..


ஒரு நொடி
நீ...
நிமிடமாய் நான்...

ஒவ்வொரு நொடியும்
நீ..
வாழ்கிறேன் நான்..


நனைகிறேன்
நான்..
குளிக்கிறாய் நீ..


முத்த சத்தங்கள்
காது கூசிடும்..
முந்தானை ஓரத்தில்
உன் கூந்தல் மழை...

நித்தமும் நீர் தேடி
ஆவலாய் நாங்கள்...
உன் முகம் காண..

மழையே வாராயோ...
மண்ணோடும் என்னோடும்(புல்)
பேசாயோ...