கோபமில்லை
காந்தியின் மேலெனக்கு
அவர் படம் போட்ட நோட்டு மீதே..

கிட்டவில்லை
வயிற்றுக்குப்போக
வழிகாட்ட அவர் முகம்...

ஆனாலும் கவலையில்லை
கைவிரல்கள் பத்துண்டு
என்னோடு உலகாள..

வெறொன்றும் தேவையில்லை
என் தாயின் மடி துயில..
பசியோடு இருக்கையில்
புசித்திடுவேன்
அவள் அமுதை
கவியாய்..
கற்பனையாய்..
கவி உண்பேன் மழலையாய்..


வயிறு புடைத்த நாட்களில்
வம்பிற்கு அவளோடு
வாய் வார்த்தையில் வானவில்
வரைந்திடுவேன்...

வாழ்க்கையும் வாழத்தானே
வலியும் சுகம்தானே...
வலியோடு வழி தேடியும்
வாடிட மாட்டேனே...

என் தாயின் மடி போதும்
ஏற்றம் பெறும் என்னெழுத்தும்....