வாகனம் ஓட்டும்
சோலையே
என் சேலையே....
கொடி பிடித்துப் போராட்டம்
கோட்டையை பிடிக்கவா..
கோபமாய் என் கண்கள்
கேட்டது கண்ணே
கோவை உன் முந்தானையிடம்...
காற்றிலே படரும்
கன்னி உன் கார்ப்பும்
கசப்பும் கலந்தே
காதல் தேரோட்டம்
கண்ணோடு....
சாலை விதிகளை மறந்தே
சாய்ந்தாடும் விளக்குகளும்
உன் சேலை அசைவிற்காய்
செயலிழந்து நிற்கிறதே...
முந்தானைச் சேலையை
முடிவில் இட்டுப்போ
இல்லையேல்
நானும் முடிவு தேடிப் போயிடுவேன்...
உன் வாகனத்தில்
முத்தமிட்டே...

0 Comments