பகட்டு திகட்டும்

பட்டினி சாபமிடும்
கண்கள்...
உன்னை தீண்ட
புண்ணாகும்....


மயிலிரகாய் வருடிடு
இமையால்
இசைந்து
இருவிழி கடந்து
இடைவெளி நிரப்பி
காவி குறை பரப்பி
கனவை தின்று
கதறலோடு
காதலோடு
கனவுகளை உடைப்போம்
மனக்கதவடைப்போம்.....

மாற்றமோ என்னுள்
மாறுதல் உன்னில்
மனசை மட்டுமே பாராமல்
மனம் தின்னும் பணத்தையும் தேடுறயே...

மனசு கனக்கையில்
மார்கழி கழிகையில்
மாலை மயக்கத்தோடு நானும்
மனமாற்றமின்றி நீயும்...

மத்தியான பொழுதுகளில்
மஞ்சள் வெயில் முகத்தில்
மறைவான புன்னகைக்குள்
புத்தியை தொலைத்தேனடா...


பூவோடு உரசும்
தென்றலைக் கேட்டுப்பார்..

முகிலை முத்தமிடும்
முந்தானை தீண்டா
காற்றாக நீயும்
முடிவு தேடியே
முடிவிலி தேடலோடு நானும்...


கல்யாண கட்டிலுக்கு
காமனும் வேணுமோ
அவனுக்கும் காசுதான் பஞ்சமோ
என் மஞ்சமோ...

மயிலிரகு ஒவ்வொன்றாய்
வண்ணம் மாறிடும் காலமிது..
மடி நிறப்பி மனம் நிறைய
என் மாசம் குறையும் காலமிது..

மாலையோடு நீ  வாடா
நிலா போலே
நிறைஞ்ச பௌர்ணமியாய்
நானிருக்கேன்...

மறந்தும் நீ வரலேனா
மரியாதை எனக்கேது...
மணம் முடிக்கத்தானே தவம்
மரணம் முடிக்க தேவையில்லையே...

இறுதி வரிகளிலாவது
இருப்பதை நிரப்பு
இருதயம் கனக்காமல்
இறப்பை நோக்கி நான் போறேன்....