நிழல் எது
நிஜமெது புரியாத வாழ்க்கை..
நித்தமும் கூச்சல்
நிம்மதி இல்லை...
கல்லைக் கண்டே
கரையும் மனமே..உன்
கண்ணெதிரே துடிக்கும்
உயிரும் அறிவாயோ..
காதல் செய்ய
செயலியில் வருவார்...அவர்
செயலில் காதல் இன்றி
செய்தென்ன நன்மை...
சுற்றும் நட்பும்
கூடவே இருக்கும்...உன்மேல்
பாசமும் செய்யும்...நீயோ
முகநூலில் விரும்பும்
விருப்பமே அன்பென நினைப்பாய்...
புன்னகை பூக்க
புத்துயிர் பெருவாய்..உன்புன்னகை பதிவில் மட்டுமே
இருந்தால்
உன் வாழ்க்கை இன்பம்
மகிழ்வாய் வருமோ..
காசோ பணமோ
கட்டிய மனைவியோ...
கண்களின் முன்னே
காதலும் செய்திடு..
கற்பனை செயலியில்
கலந்தே போனால்..உன்
வாழ்க்கையும் ஒருநாள்
கனவாகவே போகும்..
நிழலை நிஜமாய்
நம்பிடும்போதே...
உண்மையும்
கண்ணெதிரே....
கரைந்தே போகும்...
காற்றையும் நீயே
காதல் செய்...அது
நிழலில்லை நிஜமென்று
உணர்த்திடும் பொழுது..

0 Comments