கண்ணா..

நான் உன்னைத்தான்
காதலிப்பேன்..

நீ
சிரிக்கும்போது தான்
என் மனம் சீராய்துடிக்கிறது..
உன் இம்சை புன்னகையில்
புடவை இடையை மறக்குது.

பூக்காத மலர்கள்
பழமாகிறது..நீயே
பசியாற பட்டினி கிடக்குது..

பாதியில்
உன் பார்வை பட்ட
இடமெல்லாம்
மேலாடை வேண்டாம்
இனி என போராட்டம் நடத்துது..

இருதயம்
மாராப்பை தாண்டி
எட்டிப்பார்க்குது..நீ
சொன்னால் தான் கேட்பேன் என்று
கதறலெடுக்குது..

கருவிலும் உன்னையே
சுமக்க ஏங்குது..கண்ணா
வா அருகே..
பெண்மை மயங்கி
மருகுது..
உன் காதலில் ஏங்கி..
ஏமாற நினைக்குது..

திருந்தாத
என் மனதை
உன் இதழ்களை கொண்டே
இம்சித்து புத்திமதி சொல்..
அப்படியும்
கேளாவிட்டால்
உன் கைகளை கொண்டே
என் கழுத்தை நெறித்து
நெற்றியில் முத்தமிடு..

அதனினும்
பெரிதாய்
மாற்றங்கள் வந்திடாது..
ஏனெனில்
நான் கேட்பது
ஊடலல்ல..
உன் காதல்….
கயிற்றில் முடியிட்டு
கட்டிலை தாண்டி
கல்லறைவரை
கூடவே வருமே..
அந்த காதல் …
தருவாயா..
பதில் சொல்…

என் கன்னம் சுருங்கி
சுருட்டை முடிகள்
சூழ்நிலை மறந்தாலும்..
நான் உன்னை தான்
காதலிப்பேன்..

நீ என்னை அணைத்தாலும்..
அரவணைத்தாலும்..நீயே..
நீ மட்டுமே வேண்டும்..

கட்டுடல் கரைந்து
கல்லறை போனாலும்..நானும்
அந்த
காற்றில் கலந்தாலும்..
நான் உன்னைத்தான்
காதலிப்பேன்.. கண்ணா..
என் காதலா..
என் கள்வா..என் மனம்கவர்
கண்ணாளா…
வா..வா…வா.