காதலோ கெஞ்சுதடி
கண்ணோரமாய்
கண்ணீர் மட்டுமே மிஞ்சுதடி….
கவனமெல்லாம் கவளத்தில்
கட்டாங்கிச்சேலை கொசுவத்தில்…
காத்திருந்தே காதலிச்சோம்…
களத்து மேட்டிலல்லோ
களை பறிச்சோம்…
கண்ணனாய் நான் மாற
உன் விரல்களே குழலடி…
கும்மிப்பாட்டு குழவைச்சத்தம்
கூடி நிற்கும் ஊருசனம்…
அத்தனையும் கூட்டிவந்தே…
என் ஆயுசையும் சிறைபிடிச்சே….
அந்தநாள் மறந்திடுச்சோ…
என் அரணாக்கயிறு பிடிச்சிழுத்தே..
என் அம்மனா நீ…
அம்மாவா நீ…
என் அடி வயிற்று கட்டிக்கு — நீ
ஆலமரப்பாலை தடவி…
என் அஞ்சறிவு தீயுமுன்னே….
என்னை அத்தான்னு நீ அழைச்சே…..
கட்டின நாள் முதலா…
நானும் உன்னை கால் நீட்டி
தீண்டலையே…
என் கால் படும் துன்பம்கூட
என் தாரமான
உனக்கு நானும் தரலையே….
இன்றோ தலைகீழா
பறக்கறேனே….
உன்னை தலைசாயும் வேளையிலும்
என் தாய் நிலமா கேட்குறனே….
குத்தமின்னு ஏதுமில்லை…..
குத்த கத்தி எடுத்தேன்
நானும் புள்ள…
கை கட்டிய கயிறில்லா
அந்த
கள்ள மனதை அறுக்கணுமே….
என் கழுத்தோடு
சேராத…அந்த
மசக்கை நாளை மறக்கணுமே…
மறைக்கணுமே….
மகராசி உன்னைத்தானே
மனசுக்குள்ள மாரியாத்தா போலத்தானே…
நானும்
மனசார வேண்டிக்கிட்டு
மாங்கல்யம் கட்டிப்புட்டேன்….
மனசு கோணாம வாழ்ந்திருந்தேன்…
கை புடிக்க தெரியலையோ…
கட்டிப்புடிக்க தெரியலையோ…
கண்ணசைவின் அர்த்தம் தேடி
கட்டிலை கொள்ள தெரியலையோ….
கதறி அழும் நேரமெல்லாம்
கை கால் பிடிச்சு
கண் விழிச்சே காத்திருந்தேனே…
காரணம் தெரியாமலே
நானும்
கடனுக்கு கால் பிடிச்சேனோ….
அவிச்ச அரிசின்னு தான
நானும்
ஆட்டுக்கு தழை பறிக்க
காட்டுக்கு போனேன்….
அடுத்தவன் கூடத்தானே
நீ
அரிசி தின்னு
என் கண்ணை அவிச்சே…
நீ
அவிச்ச அரிசியா சிரிச்சே….
என்னை பார்த்து
அவனியே சிரிக்கவைச்சே….
வெவரம் பத்தலைனோ
நீ
வெவரமா
தாலியை
ஆணியில மாட்டிவைச்சே……
அப்பவும் நான்
நம்பலையேடி….
உன்னை வண்டு தின்னா
மலராத்தானே
பூசை செஞ்சேன்…..
அவன்
வக்காலத்து வச்சு இன்றோ
என்னை வசைபேசி சிரிச்சிட்டான்…
வயிற்றில் உள்ள
கரும்புள்ளியால்
என் கண்ணீரை உடைச்சிட்டான்…
கருப்பனுக்கு பேரன்நானடி
நானும் காத்து கருப்பாக போரேனடி…
கத்தியை தூக்கிக்கிட்டு
என் கழுத்தை அறுக்க போரேனடி….
போறேன் போ….
மறுபடியும்
பொறக்கவே
போறேன் போ…
மீண்டும் இங்கே
பொறப்பெடுத்து
உன்னை காதலிக்கவே
பொறக்க போறேன் போ….
உடம்பவிட்டு உயிர் மட்டுமே
போகுதடி…..
உணரா என்காதல்
இருந்தென்ன இலாபமடி….
இப்படிக்கு
இளமாறன்….
தனது அப்பாவின் கடிதத்தை படித்து முடித்து கண்ணீரோடு நிமிர்ந்தாள் ஆதி (எ) ஆதிரா.
மகிழ்வுந்தின் சத்தம் அவளது கவனத்தை கலைத்திருந்தது.
தனது அப்பாவின் நினைவு வரும்போது,அவரோடு பேச ஆசைப்படும்போது அவளது முதல் விருப்பம் அவரது இறுதிமூச்சின் போது அவர் எழுதிய அந்த கடிதமே.
அவள் இதுவரைக்கும் அதை பலநூறுமுறைக்கும் மேல் படித்திருப்பாள்.ஆனாலும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் கண்கள் கலங்கி கண்ணில் கண்ணீர் வழிவதை அவளால் தடுக்கவே முடிந்ததில்லை.
தன் தந்தையின் கிராமத்து காதலும்,அவரது மரணத்திற்கு காரணமான தன் தாயின் துரோகமும் அவளை தினசரி உறங்கவிடாமல் கொல்லும்.திடீரென ஒருநாள் தூங்கி எழுகையில் இரத்தவெள்ளத்தில் அப்பா பிணமாக கிடந்ததும்,காணாமல் போன தன் தாயை காணோமென தேடி அழுதே முகம்வீங்கியதும் அவள் நினைவுக்குவரும்.மனசு வலிக்கும்.
சிறுவயதில் பலநாட்கள் தன் தாயின் நினைவுவரும்போது தன் பாட்டியின் முந்தானையில் முகம் புதைத்தே அழுவாள்.
இவளது அப்பா ஒரே பிள்ளையாய் செல்லமாய் வளர்ந்த பண்ணையாரின் வாரிசு.இவளும் சிறுவயதிலிருந்தே செல்லமாய் வளருந்தவள்.
தன் தாய் தந்தையர் இல்லாத குறையை தாத்தா பாட்டியிடம் காணாதவள்.அவர்களின் வளர்ப்பில் வளர்ந்து மருத்துவ படிப்பை முடித்து,இரண்டு வருட வேலையையும் முடித்து,முழு மருத்துவராக தன் ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.
தன் ஊரில் பெரியமருத்துவமனை கட்டி அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும் என்ற தாத்தாவின் ஆசைக்காக மருத்துபடிப்பை முடித்து இன்று ஒரு மருத்துவராக தன் ஊருக்கே பெருமையாக விளங்குபவள்.
வெளியே மகிழ்வுந்தின் சத்தம் மீண்டும் அவளது கவனத்தை கலைக்க,தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்.
அங்கு அவளுக்காக காத்திருந்தது அவளது வீட்டு வேலையாள் பசுபதி.இருபது வருடங்களுக்கு மேலாக அவளது வீட்டில் வேலைசெய்யும் விசுவாசமான வேலைக்காரன்.
அவள் அருகில் வரும்போது கேட்டார்.
“….அம்மா…ஆதி…நாம இன்னும் ரொம்பதூரம் போகனுமுல்ல…நீங்கள் இங்கயே…தாமதிச்சா..எப்படியம்மா…அங்க தாத்தா ரொம்பநேரமா…உங்களுக்காக காத்திட்டு ..இருக்காரு..பாருங்கள்..எத்தனை போன் கால்னு…….”என சொன்னாவாரே அலைபேசியை காட்டினார் பசுபதி.
“…அண்ணா….கொஞ்சம் அமைதியா இருங்க…இன்னும் எட்டுமணிநேரம் நாம போகணும்…இப்பவே நீங்கள் ….அவசரப்படுத்தினா…எப்படி….மணியப்பாருங்க….எட்டுமணி…மார்னிங் வீட்டுக்கு போய்டலாம்….”என்றவாறே தன் கைகடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். அது இரவு எட்டு மணியைக் காட்டியது.
“…அம்மா…இங்கே கொடுங்க…”என்றவாறே அவளது லக்கேஜை வாங்கி பின்புறம்வைத்தான்.
ஆதிரா காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
பசுபதி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்கினான்.
அப்போது ஆதிரா சொன்னாள்.
“….அண்ணா…இரவுநேரம் ரொம்ப வேகமா போகவேண்டாம்…மெதுவாகவே போங்க….உங்களுக்கு தூக்கம் வந்ததும்..சொல்லுங்கள்..நானே ஓட்டறேன்…சரியா..”என்றாள் .
“….ம்..சரிங்க..அம்மா….போலாமா…”என்றவாறே வண்டியை இயக்கினான். சென்னையிலிருந்து வண்டி அவளது பையூர் கிராமத்தை நோக்கி ஓடத்தொடங்கியது.
“….அண்ணா…இப்போ ஊரில் தாத்தா….ஆஸ்பிட்டல் வேலையெல்லாம் முடிச்சுட்டாங்களா…”என கேட்டாள் ஆதிரா.
“….அம்மா…அதெல்லாம் சொல்லக்கூடாதுனு..அய்யா சொல்லிருக்காங்க….நீங்கள் நேரில் வந்து தான் பாக்கணுமாம்….”என சொன்னான்.
“…இந்த தாத்தாவுக்கு இதுவே வேலையாப்போச்சு….”என்றவாறே தன் அலைபேசியை எடுத்து தன் தாத்தாவிற்கு அழைப்பை அழுத்தினாள்.
அப்போது மகிழ்வுந்து நெடுஞ்சாலையின் ஓரமாய் ஒரு குழம்பியகத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.
“…நோ….” என்றாள் ஆதிரா.அவளுக்கோ இப்போதுதான் தேனீர் குடித்து மிச்சத்தை அவனது முகத்தில் ஊற்றிய நினைவு.
“ .. நான் ஒரு காப்பி குடிச்சிட்டு வந்திடறேன்….” என்றவாறே காரிலிருந்து இறங்கி நடந்தார் பசுபதி.

0 Comments