உழுதவன் ஊருக்குள்ளே
உலையோ ஊஞ்சலிலே
உயிரோ ஊசலிலே..
உண்பது மறந்து நாம்
உடுப்பதை நினைக்கிறோம்..
உணவிட்டவனை மறந்து
உடைமை விற்றவனோடு சுற்றுகிறோம்..
ஊரடங்கு இல்லா நாளில்
ஊரடங்கி சாகிறோம்..
ஊணுக்காய் அடங்கு என்றால்
ஊரைச்சுற்றி திரிகிறோம்..
உனக்கு வரும்வரை ஏனோ
பசியும் வலியும் தெரிவதில்லை
மானுடனே..
வரும்முன்னே சொல்வோர் சொல்
நரியிட்ட ஊளையாய்
நகைப்பதேனோ...
நாளை நடக்கும்
நாம் உண்பது முதல்
நாம் உயிர்ப்பது வரை
நாம் கையேந்தி நிற்போம் -அந்த
நான் என்ற முதலாளியிடம்..
உன் உயிரை அவனே விலைசொல்வான்
விளைவிக்க சொல்வான்
விலை பேசுவான்
உன்னையும் உயிரோடு
உணவாக்கி விற்றிடுவான்..
விழித்துக்கொள் தமிழா
விவசாயத்தை
விழியாய் கொள் தமிழா...

0 Comments