அதிகாரம் பெற வேண்டும்
ஆணையும் நானே பெற்ற
பெருமை வேண்டும்..
ஆட்சியில் பங்கு வேண்டும்
ஆணாதிக்கம் களைய வேண்டும்.
கற்புக்கு இலக்கு வேண்டும் - அது
கண்ணால் கரைவது இல்லை - என
உணர்த்த வேண்டும்..
காமம் கொல்ல கைகள் வேண்டும்
காமனை கழுத்து கயிற்றோடு மட்டுமே
கட்ட வேண்டும்..
பேதை பிஞ்சுகளை காக்க வேண்டும்
பேனா முனைகொண்டு
பேரறிவால் வெல்ல வேண்டும்..
சட்டமும் திட்டமும்
சமமாய் வேண்டும்..
சாதியில் முதலாய்
பெஞ்சாதி வேண்டும்...
அழகு தமிழாய் வாழ வேண்டும்
அந்த தமிழின பெருமை
தாயாக வேண்டும்..
தாயும் தாரமும்
மணக்க வேண்டும்..
அந்த மலரை நீரூற்றி
மங்கையரே வளர்க்க வேண்டும்...
மாற்றம் என்பது மடமையம்மா - அதை
மாற்ற வேண்டியது நீயம்மா..
அசாத்தியம் என்று ஏதுமில்லை
அது தேவைக்கு
முன்னால் இருப்பதில்லை...
முந்தானை கொண்டு
ஆணை மூடுகிறாய் மகவாய்..
இது முடியுமென்றால்...
உன் குரல் கடித்தால்
ஆண் அவத்தை மூடு மரணமாய்..
இதுவும் முடியும்..
ஆணாதிக்கம் முடியும்..
உன் முடிவில்...

0 Comments