வெல்லும் சொல்லை
விற்பனை செய்யாதே..

கொல்லும் சொல்லை
அறுவடை செய்யாதே...

உன்னைப்போல்
பிறரையும் நேசி..
உலகம் சொல்வது
உண்மை தானா யோசி...

வாழ்க்கை வசப்படும்
வானம் தூரமில்லை
வியர்வை வாசனை தேடு
அதில்
பூக்களின் வாசனையாகும்
உன் வாழ்க்கையில்
மாறும்
மாற்றும்...


உழைக்க உறுதிகொள்
உறுதியாய் வெற்றிகொள்...