உன் பின்னே

நானும்
தயாரடி...என் தாய்வயிற்றில்
எனக்கு முன் வந்த
என் தாயே..

நீ என்
ஆசைகள் எல்லாம்
சேர்த்து வைப்பாய்...
என்னை உன் ராணி என்பாள்..
நீயே என் உலகமென்பாய்..

என் உயிரோடு
உடலையும் சேர்த்து வளர்த்தாயடி...
நானும் கன்னியானேன்..
தாயே..
நீயே இன்றும்
கன்னியாய்...

கற்பை மட்டும்
சேர்த்து வைத்தோமடி...
காசை சேர்க்க வழியின்றி
வாழ்ந்தோமடி...

இன்று நான்
உன் மடியில்
பாரமாகினேனடி...
என் தாயே...

வயிற்று பசிக்கே போராடும்
நம்மிடம்
நகைகடை பொம்மைகள்
கேட்கும்
இந்த ஆண்களை
பார்கையில்...
நான் இறுதிவரை
உன்னோடே உயிர் வாழ
ஆசையடி...

ஆண்களின்
தீண்டலும்..அரவணைப்புமே
வாழ்க்கையின் முடிவென்று
யார் சொன்னதடி...
அப்படி சொன்ன
அவனும் ஒரு
நகைக்கடை பொம்மையையே
அரவணைக்கட்டுமடி...

நான்
உன்னோடே
இறுதிவரை இப்படியே..
சொல்லத்தான்
ஆசையடி
எனக்கும்
உன் மனதின் ஆசை
அறியாமல்
அன்பு தங்கையாய்
தவிக்கிறேனடி...