நீ ஒரே ஒரு முறை
எனக்குள் வாழ்ந்து பாரு..
என்னைப்போல
வேறு யாரு...
ஆழி தாண்டி
அடிமையாய்
அடியெடுத்து....
அனாதை மதம் பிடித்து
ஆட்சி மாறியே
அதிகாரம் மாறி..
புதிய பிறப்பாய்
அரிதாரம் பூசி
அகவைக்குள் புகுந்து
வசை மெலிந்து
பூவைக்கும் பயந்து
கூகைக்கும் பயந்து
அரை வயிற்று சோற்றுக்கு..
நஞ்சுண்ட நா தீண்ட
நன்னில புழுவாய்
நஞ்சில்லா நாகமாய்
நாதியற்ற மனிதனாய்...
வியர்வையில் குளித்தே
நா சுவைக்க
நன்னீர் புசித்தே
புணரியில்... (தனிமை)
நற்பிறவி
இதுதானென்று
நான்முகனும் படைத்தானோ...
என்னுள் நற்றமிழை
அடிமையாக்கி ....
வழிகளை வழப்பாக்கி....
கேடிலி மாமிசம் தின்னும்
நா மாண்ட கூட்டமிதில்..
பாவியடா நானும்
தினசரியும் பாடும்பாட்டு..
மணக்கும்
நீர் கோலம் மனதுக்குள்...
நானும்
மகராசனாம்
தங்கம் தின்ன
தமிழனின் பரம்பரையாம்..
இன்றோ
தரம் கெட்டுப் போனேனோ
தரம் தாழ்ந்து போனேனோ
தடம் மாறிப் போனேனோ ...
இது யார் செய்த பிழையோ
தகப்பன் இல்லாத
குடும்பமாய்...
தரமில்லாத தரணியில்
தடுக்கி விழுந்தேன் ...
இன்றோ
தரை தீண்டி எழுகிறோம்
தடம்பதிக்கவே தூற்கொள்கிறோம்
சிங்களத்தை சிறைவைத்து
புறமுதுகிடாமல் வாழ்ந்த
புலிகளின் பிள்ளைகள்
இன்றும்
சீற்றத்திற்காய்
காத்திருக்கும் கூட்டமடா..
நாங்கள்..
உயிர் வற்றியும்
பற்று மாறா...
பைந்தமிழர் கூட்டமாம்...
என்னைப்போல
ஒரேயொரு முறை
வாழ்ந்து பார்...
தமிழ்கண்ட தமிழனே..
அன்றி..
என் நிலை
நீயும் காண்பாய்...
நாளை விடியலில்...

0 Comments