உனக்காய் ஆசையாய்
நான் வளர்த்த செடிகள்
இன்று பூத்து நிறைந்திருக்கிறது..
பாரடி குறிஞ்சி பூவே..
நீ என் தாடையின் நடுவே....

மூச்சும் முப்பதாப்போச்சு
என் காதல் ஏனோ
உன் பிம்பமாய் மூழ்கியேபோச்சு..

என் காதல்
உன் வீம்பால் மூச்சு பேச்சின்றி போச்சு..

முழுவதும் படிக்கா பக்கங்கள்
அடுக்களை பக்கத்தில்
நீ அடங்கிய
புத்தகத் தலைப்பு போதுமடி..
உனக்கு என் காதலை
பிரசுரிக்க...
பசி மறக்க...
சுவைக்க...

காதல் என்றால் என்னவென்று
உனக்கு
என் மூச்சுக்காற்று சொல்லலையோ
நீ நடந்த பாதையெல்லாம்
என் நினைவுகளும்
ஒரு பொருட்பன்மொழி
பொருட்டாகலையோ...

இமை தினமும்  விழிக்கும்
கண்ணாடி
முன்னாடி
அந்த ஒரு நொடி...
என் நினைப்பு தோணலையே...

என் காதல் கவிதை காகிதங்களே உனக்கு கணையாழி....
நீ ஏனோ அனுமாரையே தேடுகிறாய்...
தூது சொல்ல....


என்னிடம் நீ வா
என் மார்பை கிழித்து காட்டச் சொல்...
நானும் தயாரடி....
நீ தப்பிக்க
முடியாதடி...

உன் பாதச்சுவடுகள்
வலிக்குமென்று நானும்
பாதரட்சை இன்றியே நடக்கின்றேன்...

பாதி தூரமே கடந்திருப்பேன்..
காதலாய் உன்னையே
துணைக்கு அழைக்கிறேன்...

கல்லறை தூக்கம்
தேடும்வரை...
கற்பனையும்
பசி ஆற்றும்வரை...

படுகையில் மணலாய்
படுக்கையில் தணலாய்...
உடுக்கையில் அனலாய்...
மிடுக்கிடும் உன் முகம்..

மலரோ காய்வதில்லை...
உன் மனம் தீண்டாமல்
மாள்வதில்லை...

வாடையே...
என் வடிவழகே....
ஒருமுறை
தாடை தீண்டிப்போ...
பூ வாசம் பற்றிப்போ..

என்னை காதலில்
பற்றி பருகிப்போ...
ருசித்தே
பசியாகிப்போ...
போ....
போயேன்...
பொருளில்லா எனக்கு
பொருட்டாகிப்போயேன்...

அந்த
பொட்டுக்கு மத்தியில்
என்னை ஒட்டியே போயேன்..
ஒட்டிக்கிரட்டியே
ஒன்று எனதாம்..
மார்புக்கூட்டில் துயில்கிறதாம்...
மாற்றம் உனதாம்
துயில் எழுப்பி
உயிர் கொடுவேன்...

இல்லை
துயிலா வண்ணம்
துகில் கொடுவேன்....
துயில் பறித்தே கொடு
துன்பியல்.....

என் இன்பியே....
இறங்கி வா...
என்னுள் இறக்கமாய் வா...
இறவாத காதலோடு வா....