நோட்டாவிற்கு
ஓட்டுப்போட்டு
பெருமைகொள்ளும் நாற்கால்களே
நான்கறிஞர்களே....
ஓர் உண்மை அறிவீரோ
உமக்கு
நீர்
மக்கென்பது..
ஆயிரம் ஓட்டுக்கள்
நோட்டாவில் வென்றாலும்
ஒற்றை ஓட்டு வாங்கிய
போட்டியாளனே வென்றவனாம்
அரசியல் சட்டமாம்
ஆன்றோர் அறிவீரோ....
அரசியல் அறிவீனர்களே
அறிவீரோ
உனக்கான ஒருத்தனை
நீதான் தேட வேணும்
வியர்வையை கடனாக
நீ பெற்றால் ருசிக்குமோ....
ஆறு கல் தொலைவில்
தொலைதூர அரங்கமதில்
ஆயிரம் பணம் கொடுத்து
அரிதாரிகளுக்கு
அடிமைப்பட்ட வம்சமே
தலை தாழ்த்தி ஆர்ப்பரிக்கும்
கூட்டமே.....
ஆண்டாண்டு காலமாய்
ஆண்டவனைத் தேடுகிறாய்
ஏன்
உன்னை ஆளவேண்டியவனை
தேடமாட்டீரோ...
நல்லதும் கெட்டதும்
கலந்ததே
இவ்வுலகம்..
காலூன்றி நடக்கையிலே
நரகலிலே நகம் பதித்தீரோ..
இல்லை தானே
நான்கடி தாண்டி ஓடிநீர் தானே..
ஏன்
நீர் இன்னும் சாக்கடைக்குள்
நீர் பாய்ச்ச மறந்தீராம்..
சாக்கடைக்குள் நீராக
உன் வாக்கும் கலந்திட்டால்
சாக்கடையும் நீராகும்
நீரோடையாய் உருமாறும்...
ஊன்றுகோல் உன்னிடமே உதவிக்கு
ஊறுகாயை ஏன் தேடுவீரோ...
உதவும் உன் விரலை
செல்லாக் காசாக்கி
செல்லரித்தே சாகப் போறீரோ....
ஓட்டுப் போடாதே
நோட்டாவிற்கு
ஏன் சோம்பல்
நல்லவனை தேடுவதற்கு...
விரல் கொண்டே வாதிட்டேன்
வீணருக்கு புரியுமோ
வருந்திட்டேன்..

0 Comments