வெள்ளைக்காகிதம்
என்னில் - அவன்
விரல் கொண்டு
வண்ணமிட்டான்.
நான் ஓவியமானேன்..


கண்ணீர் துளி
என்னில் - அவன்
விரல்களை தூரிகையாய்
தீண்டிவிட்டான்..
நான் காவியமானேன்...

என்
காதலில்
வண்ணமும் எண்ணமும் எழுத்தும்
ஆனவனே....உன்
படைப்புகளின்
கண்காட்சி விரைவில்...
தொடங்கும்..தொடரும்..
என்னில் படரும்...

பத்துமாதம் காத்திரு...
பரிசு பெற..