வசவு வாடாமல்லி
வைக்கணும் கொஞ்சம் தள்ளி..

விடியலில் வீரம் காட்டி
நாட்டணும் நம்ம கொடி..

படுக்கையை தூர ஓட்டி
பாடிவா பட்டம் கட்டி..

மனசோடு கவனமாக
மல்லிகை பதியமாக...

வியர்வையை நீர் பாய்ச்சி
உழைப்பையும் விதைச்சிப்புட்டா..

கடவுளும் தேவையில்ல நீ
கஞ்சிக்கு துயரப்பட ஏதுமில்லை..

கண்விழிச்சு பாரடா..
காரணம் நாமடா


எட்டிப்பிடி
நம்ம கொடி...

உன் பத்து விரலே போதுமடா..
இருதயம் பற்றுமடா...

தன்னம்பிக்கையே
நம்ம கொடி...அதை
உன் மனசுக்குள்ள
ஏந்திடு..நீ...