வாழைமரம் ரெண்டு
வாலிப நாண்(ன்) கொண்டு
பசிக்கும் பசலை பற்றி
பற்றி எரியும் - மனம்
எரியும் நெருப்புத் துண்டு...

இதுவோ வாசலோ வாடையோ
மாதமோ ஆடியோ
மாலையோ தேவையோ
எது வேண்டும் உனக்கு
எடுத்துக்கொள் என்று
ஏன் அழைக்கிறதாம்...
அடிவயிறும் ஆசையில்
பசிக்கிறதாம்...

பார்வைகள் கொள்கிறதாம்
என் நெஞ்சை..
நெறிஞ்சிலாய்
குத்துகிறதாம் - ஏனோ
வேதனைகள் இனிக்கிறதாம்..
இளமை
இதற்கே இசைகிறதாம்....

இருதயகலப்புகள்
இமைவழியே நடக்கிறதாம் - ஏனோ
இதழ்களிடமே
சம்மதம் பெறுகிறதாம்..
சங்கமிக்கிறதாம்...
சண்டையிடுகிறதாம்...

இருப்புகள் குறைகளில்லை
கணக்கெடுப்பு தேவையில்லை
கண் ரெண்டும் சொல்கிறதாம்
இலாபநட்ட கணக்கிதுவோ....

பேரேட்டு பதிபொருளோ
இது பேரண்டம் காணா
இருபுறமோ...
வரவும் செலவுமோ
இருள் நாணு (னு) ம் இலாபமோ...

தனியாள் வணிகமோ - நீ
தனியாய் வரணுமோ
தரணியில்  - ஒற்றைக்கால்
தவமாய் -   இமை தவிர
மற்றவை காணணுமோ..
கற்பிலக்கணமோ..
காதல் இலக்கணமோ
கற்கணுமோ..கற்பிக்கணுமோ..

நீ
கருணை கொள்ளணுமோ
பிறகு கொள்ளணுமோ..

கண்களுக்குள்
நீர் போல..
நிலம் தீண்டும் அசையாக
நினைவோடு அசைகிறது..
உன் இசைவுக்காய்
இரக்கிறது..
என் மனம்
மானங்கெட்டு கிடக்கிறது...