அதிகாலை விடிந்தது 1947ல்
அடிமை விலங்கொடித்து
அரியாய் நாம் நிமிர்ந்தோம்..
ஆட்சியமைத்தோம் பெருமையோடு
ஆண்டாண்டு காலமாய் ஆண்ட
வெள்ளையனை வேரறுத்த திமிரோடு..
ஆட்சிகள் சில கண்டோம்
குறுக்கும் நெடுக்குமாய் ஆங்காங்கே
ஆதிக்கமாய் அரசனாய்
கக்கனையும் காமராசனையும்
அறிவே மெச்சும் அண்ணாதுரையும்
நாம் பெற்றோம்
தமிழோடு நாம் வளர்ந்தோம்
அவர்கள் கண் துயிலும் காலம்வரை....
கழகமொன்று ஆரம்பம்
கருப்பு நிறத்தோடு
கண்ணாடி மூக்கோடு
பெருங்கவி கொண்ட காளைதனை
கலைஞராய் நாம் கண்டோம்..
இருளை கிழித்துக்கொண்டே
ஒளி வீசிய சூரியனை நாம் கண்டோம்..
கயமையெல்லாம் ஒழித்து
தமிழை காத்திட்ட நெறிகண்டோம்..
என்னானதோ விந்தையாம்
கணிதப்பிழையாம்
வெள்ளைத்தொப்பியோடு
வெளிறிய மனதோடு
இரத்தத்தின் இரத்தமாம்
எம்ஜிஆராம் அவர்
இதழ் விரித்த இரட்டைஇலைக்கு
இருதயமாய் நாம் துடித்தோம்..
மீண்டு வந்த தமிழகத்தை
மீளா துயரதிலே ஆழ்த்தி
தூங்கிவிட்ட அன்நாளில்
கண்ணீரோடு
விடை கொடுத்தோம்
விடியா இருளில் மாட்டிக்கொண்டோம்...
இருமாப்பாய் இரட்டைஇலையாய்
இருகரம் கொண்டு பாதுகாத்து
பார்க்கும் இடமெல்லாம்
தமிழக தெருவெல்லாம் தன்னை
தன்னிகரில்லா தலைவியாக்கி
ஜெயித்திட்ட ஜெயலலிதாவை
நாம் பெற்றோம் நலமடைந்தோம்..
மீண்டும் ஏதோ கணிதப்பிழை
கள்வர் கூட்டம் கணக்கெடுத்த
பக்கமெல்லாம் பணமழை
பதறிப்போய் நாம் துடிக்க..
ஆங்காங்கே களவுக்காளான்
களைகளாக நாம் கண்டோம்...
கதறிட கூட்டமில்லை
கட்டியழ ஆளுமில்லை
கண்ணைக் கட்டிவைத்தே அம்மாவை
கல்லறைக்குள் பூட்டி வைத்தார்..
ஆளுக்கொடு சட்டம் போட்டார்
ஆங்காங்கே திட்டம் போட்டார்
மாட்டுக்கு நீதி என்றார்
மனிதனைக் கொல்லப் பார்த்தார்
மானமுள்ள தமிழ்மக்கா
மடை திறந்த வெள்ளம்போல் ஓடிவர
பூணூல் கூட்டமாங்கே பூட்டியது
தம் சட்டக்கதவை...
அன்றோடே நம் ஒற்றுமை
நம் கனவு எல்லாமே கண்மூடி தூங்கிருச்சா.....
தலைமையில்லா நம்நிலத்தில்
களையெல்லாம் இப்போ
கழனியெல்லாம் நெறைஞ்சிருச்சு..
கழனியை காக்கணுமே
கைவைத்து ஏர்பூட்டி
சூரியனைத் தூர்வாரி
இரட்டைஇலை களைகளையும் நாம்பறித்து
தமிழ் கழனிகளை
தூய்மையாக்க வேணுமே
தன்மான தமிழ்குடியே
கழனியை சுத்தம் செய்ய
விவசாயி தான் வர வேண்டுமே..
அவன் மட்டுமே களை பறிப்பான்
களைகளை அவன் அழிப்பான்
ஆற்றல் கொண்ட நம்கழனியை
காத்திடும் கரமாவான்..
நம்பிடு நீ
விவசாயியை அவன்
விளைவித்த விளைச்சலிலே
விசத்தை விளைவித்ததாய்
சரித்திரத்தில் சான்றில்லை...
சாத்தியம் என்று ஏதும் வேண்டாம்
அவன் சாதிப்பான் கவலை வேண்டாம்..
விவசாயி களைகளை பறித்தே
சரித்திரம் படைத்திட
உன் விரல் கொடு போதும்
வாக்குக்காக
வேறொன்றும் தேவையில்லை பொதுவாக.....
தமிழனின் தேவைகள் யாவும் தீரும்
அந்த நாளும் வந்தே தீரும்.....
கனவோடு நாம் நிற்போம்
தமிழனோடு..
களைகளை விவசாயி
கைகொண்டே களையெடுப்பான்
திறனோடு...

0 Comments