எனக்கு ஏனோ தெரியலே ...
நீங்கள் போடர ரேட்டிங்கவிட
வேறெ தளத்தில் வரும்
பாராட்டு புடிக்கலே...
பரிசும் விரும்பலை ....

இது எனக்கு
தாய்வீடோ..  இல்லை..
உங்கள் கருத்தெனக்கு
தாலாட்டோ.....


படிக்கறது
என் உடன்பிறப்போ. இல்லை
உடலால் மட்டுமே தனித்தியங்கும்
நாம் தனிப்பிறப்போ...


மண்டைக்குள் அலாற சத்தம்
மணிக்கணக்கா எழுதணும்னு..
மணியடிச்சா சோறு கேட்கும்
வயித்துக்கு என்ன பதில்
நானும் சொல்ல....

காரண காரியமெல்லாம்
கருவாட்டுக்கு தெரியுமோ...
கருத்துச் சொன்னாலும் - அது
புரிஞ்சு
துள்ளி குதிக்குமோ....

தினமும் கனவிலதான்
கரையிறேன் நான்...
கவிதையாவே வாழறேன் நான்..
கருத்து மட்டும்
கேட்டுப்புட்டா
காதுல சீக்கா நாறிடுறேன்...


வசதியாக எழுதணுமோ
வசையொழிக்க எழுதணுமோ..
வந்தி சேரும் வம்பெல்லாம்
வரம்பு மீறாம எழுதணுமோ...



இன்னும் அம்புலியே பழகலியே
ஆத்திசூடிக்கு என்ன செய்வென்...


ஆரம்பம் போலத்தானே
முடிவுலயோ
முணங்குறனே...
நித்தமும் பொழம்புறேனோ..
எழுதாமயே
வாழறேனோ....

அதிசயம் தான் நானோ...
ஆட்டு வாலாய்
உன் நினைப்பு...
அஃறிணை விரட்டவே வருதோ....