கவியே
எங்கிருக்கிறாய்...
சைவ கோழிக்கு
சுவை விருந்து தேவையில்லையோ...
சுருக்கு பை போல
இதயம் சுருங்கி போனதோ...
சிந்தையில் சிறப்பில்லையோ..
சரிவுகள்  சரியில்லையோ..
சூழ்நிலை  சுகமில்லையோ..
சுற்றிலும் அன்புத்தொல்லையோ..
ஏதோ ஒரு பயமோ..
ஏதோ ஒரு இயக்கமோ..
ஏதோ ஒரு தேக்கமோ..
மனது பனிக்கரடி போலானதோ..


நீ எங்கிருக்கிறாய்..
கருத்து அறைக்குள்
மாட்டிக் கொண்டாயோ...
இல்லை..
கண்இமைகளுக்குள்
பூட்டிக்கொண்டாயோ ...
மனதிற்குள் மாண்டு போனாயோ...
இல்லை..
சூடிய நினைப்புக்குள்
மாட்டிக்கொண்டாயோ..
இல்லை..
மானுட பதருக்குள்
மாண்டு போனாயோ..

நீ
எங்கிருக்கிறாய்...
எதுகை மோனையிலா..
எழுத்தில்லா படத்திலா...
இல்லை..
எறும்பு தின்னும் பாட்டினிலா..

பாவமடா...
நானும் தமிழும்...
உன்னைத்தேடியே
தேய்கிறோம்...
இந்த
செயலிபோல..