உழைக்கத் தெரிந்த
உழவனுக்கு
கிழவனாகும் வரையும்
தெரிவதில்லை...
அவன்
உழைப்புக்கான கூலி....

அதனால் தான் -
ஏனோ
உழவர்கள்
கடைசிவரை
உழைத்துக் கொண்டே
சாகிறார்கள்...

மற்றவர்கள்
ஓய்வூதியம் கேட்கிறார்கள்..