முடிவுக்குள் ஆயிரம் திருத்தம்
முடிவில்லா தொடக்கம்
நீ முட்டாளா ..
முடிவிலியா...
மூன்றாம் பிறையா.
முச்சந்தி பிள்ளையா...
மூடுபனியா..
தலை கிறுகிறுப்பா..
மனதினுள் குறுகுறுப்பா...
உன்னைப் பார்க்கையில்
ஏதோ நினைக்கிறேன்
என்னமோ சொல்லுறேன்
எதுகை மோனை இல்லை
என்னமோ எழுதறேன்....
ஏதோ ஆயிருச்சோ
ஏக்கம் மட்டும் கூடிடுச்சோ...
உன்ன பருக ஆசைப்பட்டு
பச்ச தண்ணி மட்டும் தீர்ந்திடுச்சு..
பசிக்கு ருசி தெரியலையோ
நினைவோடு உப்பு கூடலையோ
ரசம் கலக்கலியோ
விசயம் சேரலையோ
மறந்தது ஏனாம்...
மதிகெட்டதேனாம்..
மனசுக்குள் வலியோ..
மதி தீண்டிய அவள் விழியோ ..
பார்வைக்குள்வழக்கோ
பணமே கணக்கோ...
ஏன் தொடரலியோ...
தொட்ட இடம் மலரலையோ...
கவலையை தூரம் ஓட்ட
கனவுகள் களிக்கலியோ
காதலோடு கலக்கலியோ..
ஓடிவா...
என் எழுத்தே...
காகிதத்தை காதலிப்போம்...
கவிதையாய் உருமாற்றி....

0 Comments