ஆண்மையே பார்..
உனக்காகத்தானே நான்
கடைவைத்தேன்..
கடையோரம் சின்ன
இடைவைத்தேன்..
இடையோடு மெல்லிய
நடைவைத்தேன்..
நடந்து போகையில்
நாணவே நான்
நகைத்தேன்..
சிரிப்புக்குள் உன்னையே
சிறை வைத்தேன்
சிறையோரம் சின்னதாய்
சிகை வைத்தேன்..
சிகையின் மேலொரு
பூ வைத்தேன்..
பூவோடு வாசமாய்
என் மதிவைத்தேன்..
மதியோடு மனமாய்
மது வைத்தேன்..
மதுவையே மிஞ்சிடும்
ருது வைத்தேன்..
ருது வான போதிலே
கவனம் வைத்தேன்..
கவனமாய்
உன்னையே
கட்டி வைத்தேன்
கட்டிலோடும்
என் பிஞ்சாடும்
தொட்டிலோடும்....
ஆணே உன்னையே
ஆதிக்கம் செய்ய
ஆமோதித்தேன்..
0 Comments