கவிதை எழுதணும்
நான்
உன்னைவிட ஒரு சிறந்த கவிதை
எழுதணும் நான்..
பலவருட தவமாக
உன் தாய் உன்னை தந்திட்டாள்
என் எண்ணத்தை வண்ணமாக்கி
உன் உள்ளங்காலில் பதித்திட்டாள்
பலநூறு வண்ணங்களை
உன் கன்னங்களில் கூட்டிட்டாள்
உலகத்தின் புன்னகையை
உன் விழியோரம் காட்டிட்டாள்
எதுகை மோனைகளை
என் கையோடு கற்பித்தாள்
கருவோடு உன்னைத்தாங்கி
என் கரத்தோடு பதிப்பித்தாள்
பாடாத மெட்டமைத்து
சேலையோடு தாலிட்டாள்(தாலாட்டு)
தன்னைவிட உன்னுடலை
தவமாய் காத்திட்டாள்..
ஏட்டோடு எழுதா என் கவியை
கருவோடு கடனாக பெற்றிட்டாள்
கருவரையில் உருவேற்றி
உன்னை அவள் பெற்றிட்டாள்
எனக்கு கவிஞன் என்றே
பெயரிட்டாள்..
என் கவிதையே நீதானடா
என் கண்ணே
என் கவிதையாள் உன்னைப்
பெற்ற பின்னே...

0 Comments