நாளொன்றாய் பொழுதொன்றாய்
நாளும் நான்திசையாய்
நாக்கு தேடும் நயவஞ்சம்
நன்மதிப்பே தின்று சொல்லும்...
நடைமாறா நெறியோடு
நற்றமிழ் நடைமாற்றா திமிரோடு
நாம் திமிறினோம்
நாம் இணைந்தோம் ...
நம்மை அறிந்தோம்
நன்மை அறிந்தோம்
நம்மை ஆளும் வன்மை அறிந்தோம்
நாம் தமிழராய் உயிர்த்தோம்...
நாடொன்று காண
நன்னிலம் மீட்க
நம்பெருமை காக்க
நா நிமிர்த்தி பேசினோம்...
நாள்காட்டிகளில்
நம் தமிழும் நலம் பெறவே
நாம் தமிழரென்றோம்
நமக்காய் தமிழென்றோம்...
நம்மைக் காக்கும் தமிழே தலையென்றோம்
நம் குருதிக்குள் உயிர் கொண்டோம்...
நல்லவை எடுத்துச் சொன்னோம்
நற்றல்லவை நாவால் கொன்றோம்...
நான் நாமானோம் நடை போட்டோம்
நாளை திறக்கும்
நம் திராணியை தரணி போற்றும்
நம்பிக்கையோடு பணி செய்வோம்....
நானும் நடை போடுவேன்
நாவால் என்னை சுட்ட
நாவண்ணன் நாவானேன்
நான் தமிழனாய் உயிர்த்தேன்
நாளைக்கும் செய்தி சொல்லும்
நாம் தமிழராய் உயர்ந்தேன்...

0 Comments