கண்ணுக்குள்
குடியிருப்போம்...
கண்ணீரை
தோற்கடிப்போம்...
காற்றுபுகா நேரமதில்
கனலாய் துளிர்விடும்
தண்ணீரை தேக்கியே
தேகத்தை குளிர்விப்போம்...
தேனடை போலே
நாம்..
நமக்காய் அன்றி
பிறருக்காகவும்
கலங்கிடுவோம்....
கலந்திடுவோம்...
காதலிப்போம்..
இந்த
உலகத்தை காதலிப்போம்...
கைபிடித்த
நெறியோடே...
தமிழ்மொழிகூடிய
பண்போடே...
தமிழால் வாழும் தமிழனாய்...

0 Comments