வானத்தின் வரைமுறை
வடிவில்லா மேகங்கள் தாண்டி..
மதத்தின் வரைமுறை
முடிவில்லா மார்க்கங்கள் கோடி....
ஆணின் வரைமுறை
இருதயமில்லா இல்லாளின்
இருவிழி மூடி...
மங்கையரின் வரைமுறை
மனம் தின்றே செரிக்கும்
மனம் தேடி...
எழுத்தின் வரைமுறை
ஏடு தின்னா எண்ணங்கள் பாடி...
என் வரைமுறை
என்னுயிர் தமிழ்மடி நாடி...

0 Comments