அந்த
வண்ண நிலவில்
நான்
கால் தடம் பதிக்க...
காதலா உன் காதலே தேவை...
காற்றையும் கடத்தி வந்து
என் உடலுக்குள்
ஒழித்து வைக்க...
உன் அரவணைப்பே தேவை..
காய்களையும்
பழங்களாக்க
உன் பார்வைகள் தேவை...
என் இதயத்தை
வெளியில் எடுத்து
முத்தமிட்டு
திரும்பவைக்க
உன் விரல்கள் தேவை..
இன்றையநாள் இனிதாக
காதலா உன்
இதழ் குவித்த
முத்தங்கள் தேவை
இப்போது...

0 Comments