இரவுகள்
இரணங்களான
என் கதை சொல்ல
ஆசை தான்.

என்ன சொல்லி
என்னாகும்
ஒரு பதிவும் பரிவோடயும்
முடியும்..

இருந்தாலும்
என் மனம் பாரம் குறைக்க
சொல்ல வேண்டும்
என்ற எண்ணத்தில்...

என்
அன்பை பெற
தகுதியற்றவர்கள்
என் தாய்தந்தையர்..
அவர்களின் கரம்
என் மேனி பட்டதோ
தெரியவில்லை... பாவம்
பட்டிருந்தால் பெரும்பாவம்...

இருவரின்
ஓராசை கூடியதோ..அல்ல
ஆசைக்கு கூடியதோ
அவருடல்
இல்லை.. அலைக்கழிக்க பட்டதோ..
யான் அறியேன்..

நான் கேட்ட
கதை யெல்லாம்
என் அம்மா
மேரியும் ஜீசசும்
பெற்ற பிள்ளை நான்...

குப்பைத்தொட்டியில்
கொட்டிய கழிவு நான்.....
சரிதான்..
அப்போதே நான்
கழிவென்று
கணித்த என் அம்மாவுக்கு...

என் இதழுக்கு
அமுதம் அளித்திருப்பாளா..இல்லை
கள்ளிப்பால் ஊற்ற
மனமின்றி
எறிந்திருப்பாளோ....

எண்ணிலடங்கா
கேள்விகள்
என்னை தினமும்
பயமுறுத்தியே
கொல்கிறது...

பாசங்கள் இல்லை என்னில்
கிடைத்தது. பரிதாபம் மட்டுமே..

பச்சை உடம்பில்
சுடு நீர் தழும்புகள்
நீங்கள் பாரத்ததுண்டா..
பசிக்கு உணவு கேட்டால்
சுடு நீரை முகத்தில்
எறிவீர்களா..

பயம் எங்கும் பயம்
எதிலும் பயம்
பசிக்கு சோறு பயம்..
படுக்க பாய் பயம்
குளிருக்கு கம்பளி பயம்....

நீங்கள் என்றோ
தேவை இல்லாமல்  எறிந்த
துணிகள் எனக்கு
புத்தாடைகள்
தீபாவளி.. பொங்கலுக்கு
என எப்போதும்
கிடைக்கும் கேசரிகள்
காலை உணவு...

என்னைப்போல்
பலரும் எனக்கு உறவாக...

நான் பருவம் வந்ததை
தெரிந்து வெளியே
சொல்லவே
ஒரு மாதம் ஓடியது
பயத்திலேயே...

அந்த கவலையிலும்
ஒரே ஆறுதல்
என் கனவு
இலட்சம் இந்த
காக்கி சட்டை போட்ட
காவல் தெய்வமாக
திமிராக
நிற்பதில்...

எனக்கு
கண்ணில் பட்ட
முதல் கடவுள்
என் இறைவன்..
என் மாதவன்...

மாதம் தவறாமல்
வருடங்கள் தவறாமல்
தன் விருப்ப நாட்களில்
விடுமுறை நாட்களில்
என்னுடனேயே கழிக்க நினைப்பான்..

சின்ன வயதில்
பிறந்த நாள் பரிசு கொடுக்க வந்தவன்..
அவனையே எனக்கு பரிசாக
அளிக்க அந்த
கடவுள் மாயன்
மாதவனே காரணம் என்பான்..
எனக்கும் அன்று முதல்
மாயன் மாதவனே
முதல் உயிர் கொண்ட நண்பன்..

என் தேர்வு கனவு
நனவாகி
காவல் துறையில் வேலை
சப் இன்ஸ்பெக்டர்..
முதல் வருடத்திலேயே
என்னை அசிஸ்டெண்ட் கமிஷனராக்கிய பெருமை
என் மாதவனுக்கே..
அவன் காதலால் இது நடந்தது...

அவன் என் உயிர்
வேண்டும் என கேட்டிருந்தாலும்
கொடுத்திருப்பேன்..

என் இதயத்தில் இடம் கேட்டது
என் பெரும் பாக்கியம்..

அவனே என் உலகம்..
எனக்கென ஒரு தந்தையையும் தாயையும் அவனே பரிசளித்தான்..

எங்களை பாதுகாக்கவும் செய்தான்..
அவனே என் காதலன்..
தெய்வம் அதற்கும் மேல்....